பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுகாயம், மfண்புக்கு மாயுமே என்று குமுறும் எனது நெஞ்சம், கடமையைச் செய் யத் துரண்டுகிறது. எனது கடமையை நான் செய்கிறேன். பிறரை வருத்த வேண்டு மென்பதற்காக எழுதவில்லை; அவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன். கண்டனத்தால் அவர்தாம் வருந்துவது உண்மையானால். அவர்தம் செயலால் உலகம் வருந்துகிறதே அதற் கென் செய்வது? தன்னுயிர்க்கு இன்னாமைதானறிவான் என் கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்’ ’ ஆ தலின் தம்மைப்போற் பிறரையும் எண் னித் தவறிழைக்காது தம்மால் இயன்ற அளவு நன் மை செய்க. பொது நலம் புரிக. ஒல்லும் வகையால் அறவினை ஆற்றுக நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தலை அகற்றுக நேர்மை பேணு க மக்கட் பண்பு காத்து மக்களென வாழ்க நாடு வாழும். மக்களாட்சி மலர்ந்து உண்மையில் மணம் பரப்பும். நாமும் நல் வாழ்வு துய்ப்போம். காரைக்குடி அன்பன் 7–10–1985 முடியரசன்