பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே படிப்புக்கு மதிப்பளிக்கும் காலம் நல்ல பண்புக்கு மதிப்பளிக்குங் காலமாகும்; நடிப்புக்கு மதிப்பளிக்குங் காலம் இந்த நாட்டுக்கே தீங்கிழைக்குங் காலம்; தோகை நடிப்புக்கு விழைகின்ற காலம் இங்கு நற்கலைகள் வளர்கின்ற காலம்; கோழித் துடிப்புக்கு மயங்குகின்ற காலம் நாடு துறைமாறிப் போய்விட்ட காலம் ஆகும். சிறந்திருந்த காலந்தான் இறந்த காலம்; சீர்களெலாம் நெகிழ்காலம் நிகழுங் காலம்; வறந்திங்குப் பண் பெல்லாங் காய்ந்து வாடி வருங்காலம் உதிர்காலம் ஆகா வண்ணம் திறங்கொண்டு மாணவர் காள் எழுக; உங்கள் திருநாட்டை விழிதிறந்து காண்க; உள்ளம் திறந்திங்குப் பேசுகின்றேன் எதிர்கா லத்துத் / திருவிளக்கை ஏற்றுவது துங்கள் கையே. 40