பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் குமுறல் இந்திய நாடு விடுதலை பெற்று முப்பத் தெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குடியரசு நாடென உலகுக்கும் உணர்த்தி விட்டோம் சில போர்களும் நடத்தி வெற்றி யும் பெற்றுவிட்டோம். அறிவியல் துறையில் ஒரளவு முன்னேறி விண்வெளியில் கலம் செலுத்தும் அளவிற்கு உயர்ந்திருக்கிறோம். உலக அரங்கில் உயரிய மதிப்பும் பெற்றுள் ளோம். அடிமை அகன்றது. மக்களாட்சி மலர்ந்தது மகிழ்ச்சி. ஆனால் ............? நாம் விடுதலை நாட்டில் வாழும் மக்கள் எனத் தக்க வகையில் தகுதி பெற்றுள்ளோமா? பண் பாட்டில், ஒழுக்க நெறியில், பொது வாழ் வில் வளர்ச்சி பெற்றுள்ளோமா? சாதிச் சழக்குகள் ஒழித்தனவா? சமயப்பூசல்கள் ஒய்ந்தனவா? ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதும், சுரண்டி வாழ்வதும் தொலைந் தனவா? தலைவர்களையே சுட்டுக்கொல் லும் அளவிற்குத்தானே முன்னேறியிருக் கிறோம்! வி டு த ைல பெறுவதற்காகச் சிந்திய குருதியைவிடப் பெற்ற பின் சிந்தும் குருதிதானே மிகுதியாக ஒடுகிறது. மக்கள் மாக்களாகியிருக்கிறோம்! அடிமைகளா கவே வாழ வேண்டியவர்களுக்கு விடு தலை ஏன்? என்று சலித்துக் கொள்ளும் வகையிற்றானே நாடு நடந்து கொண்டி ருக்கிறது! 3