பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே பண்பாட்டின் சிறப்பியல்பு, பகுத்தறிவு விளக்கங்கள், படிப்பின் மேன்மை, மண்மேட்டில் உழன்றுவரும் மக்களுக்கு மறுவாழ்வு வழங்குந் திட்டம், கண்போலும் கல்விவளர் கழகங்கள் உருவாக்கிக் காட்டல் எல்லாம் எண் போட்டுக் காட்டாமல் ஏதேதோ குழப்புகின்றார் ஏசு கின்றார். கருத்தாலே கருத்தெதிர்க்குங் கலையறியார் மன்றேறிக் கயவர் போலே பெருத்தவசை பொழிகின்றார்; பிழைபட்ட செய்திகளைப் பேசு கின்றார்; பொருத்தமிலாப் பொய்ம்மூட்டை பொதுவிடத்தில் அவிழ்க்கின்றார்; புண்ப டுத்தி வருந்திடவே தனிமனித வாழ்க்கையினைத் திறனாய்வர்; வைது தீர்ப்பர் அவை நடுவில் தகாமொழிகள், அருவருப்பைத் தருமொழிகள், அவர்ம னத்திற் சுவையெனவே கொள்மொழிகள், சுடுமொழிகள், இழிமொழிகள், தொகுத்தெ டுத்த 'நவைமொழிகள், பயனில்லா நகைமொழிகள் உதிர்ப்பவரால் நன்மை யுண்டோ? இவைதவிர்க்கப் பொதுமக்கள் எழுச்சிகொளின் பொதுமேடை ஏற்றங் காணும். 1. தீய மொழிகள் 66