பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ஓதிக்கெட்டவன் O பாதும் ஊரே யாவருங் கேளி ரென் றோதிய மணிமொழிக் குரியவன் தமிழன்; எனினும் இவனைக் கேளிரென் றெண்ணும் மனிதனை மாநிலத் தியாண்டுங் காண்கிலேன்: இவன் வாழ் ஊரை எனதுார் என்று தவறியும் நினைந்துகை தருவோ ரிலையே: தீதும் நன்றும் பிறர்தர வாரா என் றோதும் இவனே யாவும் பிறரால் வருவன என்றே வாழ்நா ளெல்லாம் தெருவெலாஞ் சுற்றித் திரிதரில் கண்டேன்; சாதலும் புதுவ தன் றெனச் சாற்றினன் யாதொரு செயலும் அஞ்சி யஞ்சிப் போதெலாம் செத்துப் புலம்பினன் அவனே: "இனிதென வாழ்வை மகிழ்தலும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே! எனுமொழி இசைத்தவன் இவன்றான் எனினும் தாழ்செயல் பலவும் தயங்கா தியற்றி வாழ்வே இனிதென மகிழ்தலும் உண்டு; 84