பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே எங்குள தமிழ னுக்கும் இடரொன்று நேர்ந்த தென்றால் இங்குள தமிழ ரெல்லாம் எதிர்த்திட ஒன்றாய்க் கூடிப் பொங்கிடின் நம்மைத் தாக்கும் கொம்பனும் புவியி லுண்டோ? கங்குலிற் சிதறி விட்ட கருமனி யாகி விட்டோம் சிதறிய நிலையர் தம்முட் சிந்தனை யுடைய நல்லோர் பதறின ர் இனத்தின் மானம் படைத்தவர் நொந்து நொந்து கதறினர் ஊர்கள் தோறும் கழறினர் உலகப் பற்றை உதறிய துறவி தாமும் போர் வெறி உடை யரானார் கதிரவன் வரவு காட்டக் கடலிடைச் சிவத்தல் கா னிர் எதிர் வருங் கால மெல்லாம் இடர்பகை இனிமே லில்லை புதியநல் வாழ்க்கை யொன்று பூத்தது தமிழர்க் கென்றே அதிர்ந்தது முரச மெங்கும் ஆர்த்தது வெற்றிச் சங்கம். 94