பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ○ 1ー・づ7 ) 1_ =rT நாடனெ எமக்கொன் றில்லேம் நற்றமிழ் மாந்தர்க் குற்ற கேடுகள் களைவ தற்குக் கிளாந்தெழும் நிலையு மில்லேம் வீடன ரிடையே வாழ்வேம் வெந்துழல் மனத் த ராகிச் சாடு த லன்றிக் கைகள் தந்திட வழியே இல்லை விடுதலைப் புலிக ளாகி வெந்துயர்க் குரிய ரா கிக் கெடுதலை எதிர்த்து நின்றீர் கிளர்ந்தெழும் நும்மைக் காக்க உடலினால் உதவி செய்ய ஒருபடை எமக்கிங் கில்லை தொடுமன வுணர்ச்சி யொன்றால் துணைவர்க ளாகி நிற்போம் நம்மை நாம் உணர்வ தில்லை நமக்குளே பகைமை கொள்ளை தும்மினால் வீழ்வார் கூடத் துரும்பென எண்ணி நம்மை அம்மவோ தாக்கு கின்றார் ஆரிடம் போயு ரைப்டோம் நம்மின வுணர்வு தோன்றின் நரிகளா அரியைத் தாக்கும்? 93