பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தொகுப்புரை.

உலகம் எல்லாம் குளிரால் நடுங்கும் படியாகப் பருவம் தவறாமல் பெய்யும் மேகம், வலமாக எழுந்து கார்காலத்து முதல் மழையைப் பெய்ததாக, அம்மழையால் பெருகிய பெரு வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலினை உடைய இடையர், ஏறுகளையுடைய ஆடுகளையும், ஆனிரை களையும், எருமைகளையும், வெள்ளக் கொடுமையில்லாத மேட்டுநிலங்களில் மேயவிட்டு, தாம் வாழ்ந்த நிலத்தைக் கைவிட்டு வந்துவிட்ட தனிமையினாலே வருந்தி, நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர்களால் தொடுக்கப்பட்ட தலைமாலை, மழைநீர் அலைத்தலால் கலக்கம் எய்த, தம் உடல் கொண்ட கடுங்குளிர் வருத்துவதால், பலருடன்கூடி இருந்து கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையராய்ப், பற்கள் பறைகொட்டி நடுங்க, விலங்குகள், இரைதேடுவதை மறந்து நடுங்க, குரங்குகள் குளிரால் நடுங்கிக் குன்றிப்போக, பறவைகள் மரங்களில் தங்குவதில்லாமல் காற்றுமிகுதியால் மண்ணில் வீழ, தாய்ப்பசுக்கள் கடியவாய் உதைத்துப் பால் உண்ணவரும் கன்றுகளை ஏற்றுக்கொள்வதைக் கைவிட, மலையையும் குளிரக் செய்வதுபோன்ற கூதிர்ப்பருவத்தின் நடு யாமத்தில். மெல்டிய கொடியினையுடைய முசுட்டையில் மலர்ந்த புள்ளிகளைப் புறத்தேகொண்ட வெள்ளியபூக்கள் பொன்போன்ற நிறத்தினையுடைய பீர்க்கம் பூக்களோடு புதர்கள்தோறும் மலா,

பசிய கால்களைய உடைய கொக்கின், மென்மையான சிறகுகளையுடைய கூட்டம், கரிய வண்டல் படிந்து, ஈரம் பட்ட வெள்ளியமணற்பரப்பில், சிவந் வரிகள் பொருந்திய

88