பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

155

ió0

1.65

170

175

அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு புனையா ஒவியங் கடுப்பப் புனைவில் தளிரேர் மேனித் தாய சுணங்கின் அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் மெல்லியல் மகளிர் நல்லடி வருட நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல் செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழிஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி, இன்னே வருகுவர் இன்துணை யோரென உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால் ஊறா வறுமுலை கொளிஇய காறிருத்திப் புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத் திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணுர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயரா மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறற்றந்து இன்னே முடிகதில் அம்ம மின்னவிர் ஒடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி எறிதொறும் துடங்கித் தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல

103