பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

125

130

135

140

இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்டு உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப் பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடுகண் புதையக் கொளி இத் துகள்தீர்ந்து ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணைபுணர் அன்னத் துநிறத் தூவி இணையனை மேம்படப் பாயனை யிட்டுக் காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப் பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து நன்னுதல் உலறிய சின்மெல் லோதி நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண் வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்

செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்

பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்

f()2