பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

1 10

115

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுக்க குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில் திருநிலை பெற்ற தீதுதிர் சிறப்பின் தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து நெடுமயி ரெகினத் துTநிற ஏற்றை குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப் பணைநிலை முனை இய பல்லுளைப் புரவி புல்லுணர்த் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக் கவிழ்ந்துவீழ் அருவிப் பாடுவிறந் தயல ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல் கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளிஇய குரூஉத்தலை நிமிரெரி அறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப் பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் வரைகண் டன்ன தோன்றல; வரைசேர்பு வில்கிடந் தன்ன கொடிய பல்வயின் வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ மண்கண் டன்ன மாத்திரன் திண்காழ்ச் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பி னல்லில் தசநான் கெய்திய பணைமருள் நோன்றான்

101