பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

65

70

75

80

85

இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக் கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானுரல் வலந்தன. தூங்க வானுற நிலந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக் கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணிர் உண்ணார் பகுவாய்த் தடவில் செந்நெருப் பார ஆடல்மகளிர் பாடல் கொளப் புணர்மார் தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேள் பொருதிறஞ் சாரா அரைநாள் அமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற் பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத் துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப் போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போாமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து

100