பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

35

40

45

50

55

தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக் குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க மாட மோங்கிய மல்லன் மூதூர் ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற் படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட் டறுவையர் வேண்டுவயின் திரிதர வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள் மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல் பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண் மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளி.இ நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை யயர மனையுறை புறவின் செங்காற் சேவல் இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்பக் கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர் கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக வடவர் தந்த வான்கேழ் வட்டம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் தண்ணறுத் தகர முளரி நெருப்பமைத்து

99