பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

25

இணைப்பு: 1 நெடுநல்வாடை

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனை இய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக்கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்

பைங்காங் கொக்கின் மென்பறைத் தொழுதி

இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரையொ டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெயலுலந் தெழுந்த பொக்கல் வெண்மழை அகலிரு விசும்பில் துவலை கற்ப அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற் கொழுமடல் அவிழ்ந்த குழு உக்கொள் பெருங்குலை நுண்ணிர் தெவிளவீங்கிப் புடைதிரண்டு -

98