பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி விளங்கும் பட்டத்தோடு பொலிவுபெற்ற, போர்த் தொழில் பயின்ற யானையின் நீண்டபருத்த பெருமை மிகு துதிக்கை அற்று நிலத்தில் வீழ்ந்து புரளும்படி, களிற்றைப் போர்க்களத்தில் கொன்ற பெரிய வெற்றிச் செயலைச் செய்து முடித்த வீரர்களுடைய அப்போரில், பகைவரின் ஒளி விளங்கும் வாளால் பெற்ற விழுப்புண்ணைக்காணும் பொருட்டு, பாசறையை விட்டு வெளியே வந்து, வடக்கி லிருந்து வீசும் குளிர்ந்த வா ைட க் காற்று வீசும் தோறும் அசைந்து, தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தலையினை உடைய, நல்ல பல பாண்டில் என்னும் விளக்கின் பெரிய தீக்கொழுந்து எரிந்து ஒளிகாட்ட, வேப்பமாலையைத் தலையிலே சூடிய, வலியகாம்பினை உடைய வேலோடு, முன்னே செல்லும் படைத்தலைவன் வரிசையாகக் காட்டிவரப், பின்னாக மணிகளைத்தன்னிடத்தே இட்ட, பெரிய க ல் க ைள உடைய கடிவாளத்தோடு, சேணம் களையப்படாத, பாய்ந்து செல்லும், போர்ச்செருக்குமிக்க குதிசைகள், கரியசேறுபடிந்த தெருவில், தம்மேல் விழும் மழைத் துரலை உதறிவிட,

இடது தோளில் இருந்து நழுவி விடும் மேலாடையை இடது கையால் அணைத்துக் கொண்டு, வாளைத் தோளிலே தாங்கிக்கொண்டிருக்கும் தறுகணாளனாகிய வீரன் ஒருவனின் தோள்மீது போட்ட கையை உடையனாய்ப், புண்பட்டுக் கிடக்கும் வீரர்கள் நலம் கேட்டு மு. க ம ன் கூறுவதில் மனம் விரும்பி,நூலால் பட்டத்தில் கட்டிய முத்துச்சரங்கள் தொங்கும் வெண்கொற்றக்குடை நவ் எனும் ஓசை எழ அசைந்து பரந்து விழுகின்ற மழைத்துளிகளை மறைக்க, நள் எனும் ஓசை எழும் நடுயாமத்தும் பள்ளிகொள்ளாமல், படைத்தலைவர் சிலரோடு, புண்பட்ட வீரர்களின் நலம் விசாரித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வரும், சேரன், சோழன் உள்ளிட்ட எழுவரோடு மாறுபட்டுப்போர் செய்கின்ற பாசறை வாழ்க்கை இப்போதே முடிவதாக. அதுவே என் விருப்பம்.

-7- 97