பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பனை செய்யப்படாத மாந்தளிரை ஒத்த மேனி நிறத்தினையும், மேனி எங்கும் பரந்த தேமலையும், அழகிய மூங்கில்போல் திரண்ட மெல்லிய தோளினையும், கச்சால் வலிந்து கட்டப்பெற்ற, தாமரை முகைபோலும், முலையினை யும், வளைந்து தளரும் இடை யினையும், மெல்லிய இயல்பினையும் உடைய ஏவல் மகளிர் துயில் உண்டாக்க, பாண்டிமாதேவியின் நல்ல அடிகளை வருட, நரை கலந்த மெல்லிய மயிரினை உடைய, சிவந்த முகத்தினை உடையராகிய செவிலித்தாய்மார், தேவியின் துத்யரை தணிப்பான் வேண்டி பொய்யும், மெய்யும் ஆகிய உரைகள் பலவற்றைப் பலகால் சொல்லி, ' இன்னே வருகுவர் இன் துணையோர்’ என அவள் விரும்பும் உரைகளைச் சொல்லவும் அவற்றை ஏற்றுக்கொள்ளாளாய், மிகவும் கலங்கி,

பால்ஊறா .ெ வ று ம் மு ைல என அழைக்கப்படும் குடத்தைக் கடைந்துகொண்ட, சாதிலிங்கம் பூசப்பட்ட, வலிய நிலையினை உடைய கட்டில் மேல் கட்டின் திரண்ட கால்களை, கட்டில் கால்களுக்கு அணித்தாக நிற்கும்படி கட்டி, புதிதாக எழுதப்பட்ட, வண்ண மெழுகால் தீட்டப்பட்ட திரைச்சீலையில், மேஷ (ஆடு) ராசி முதலாக எல்லா ராசி களோடும், விண்ணில் திரியும், விரைந்த ஓட்டத்தினை உடைய ஞாயிற்றின் ஒழுக்கத்தோடு மாறுபடும் சிறப்பினை உடைய செல்வானம் திங்களோடு என்றும் நிலைபெற்று நிற்கும் உரோகிணியை நினைத்துக் கொண்டவாறே, அத்திரைச்சீலையில் பார்க்க, பெருமூச்செறிந்து, நீலமலர் போலும் கண்கள் ஏந்தி நின்ற, மிக்கு வீழ்கின்ற சில நீர்த் துளிகளில் சிலவற்றைச் சிவந்த விரலில் சேர்த்து பிரிவுத் துன்பத்தோடு வீழ்ந்து கிடக்கும், எல்லா நலங்களாலும் சிறப்புற்ற அரசமாதேவியாரின் இன்னாதாகிய பிரிவாம் பெருந்துயர் தீர்தல் பொருட்டு. - -

96