பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டுவாய் மாட்சிமைப்பட்ட, மெல்லிய நூல் அழகு பெறும்படி, தொடுத்தல் மாட்சிமைப்பட்டு, முத்துச்சரங்களைச் சாலேசுமாக நாலவிட்டு, ஆணிகளில் மாட்டி, புலியினது வரியைத் தன்னிடத்தே கொண்ட, பொலிவு பெற்ற நிறத்தை உடைய நடுப்பகுதியான தகடு இடம் மறையும்படி கொண்டு, குற்றம் அற்று, உறையுள் புகுத்திய பல்வேறு மயிர்களைக் கொண்ட விரிப்பைப் பரப்பி, அவ்விரிப்பின் மீது வலிய காட்டு விலங்காகிய சிங்கத்தை வேட்டை ஆடுவது போலும் ஒவியத்தைத் தீட்டி, பரந்து அகன்ற இடத்தை உடைய காட்டில் மலர்ந்த, முல்லை முதலாம் பல்வேறு மலர்களை ஒன்றிற் கொன்ற மாறுபடும வகையில் தூவி மென்மை உடையதாக விரித்த படுக்கை, மேலும் மென்மை பெறத், தம் பேடுகளைப் புணர்ந்த அன்னச் சேவல்களின் அழகிய தூவியைப் பரப்பி, இ ர ண் ட க ப் போடப்பட்ட தலையணைகள் மேன்மை உறும்படி, பாயனைமீது போட்டு, அவற்றின் மீது, கஞ்சி ஊட்டப்பெற்ற. அழுக்கேறினால் அடித்து அழுக்கைப் போக்கிக் கொள்ள வல்லதான் நூல் ஆடையின், துரய மடிக்கப் பெற்ற போர்வை விரிக்கப் பெற்ற, பல்வேறு மலர்களும் துவப்பெற்ற படுக்கை.

அரசன் பிரிந்துபோயிருப்பதால், முன்பு முத்தாரம் கிடந்த மார்பில், பின்னிய கயிற்றில் கோக்கப்பட்ட தாலி ஒன்றே தொங்க, நல்லநெற்றியில் படர்ந்த சிலவாகிய மென்மையான மயிர்கிடந்து அலைய, பெரிய ஒளி பொருந்திய மகரக்குழை களையப்பட்ட காதில், சிறியவாகிய கடுக்கன் அழுத்தப் பட்டிருக்க, முன்பு பொன்னால் செய்யப்பட்ட தோடிகிடந்து தழும்பு செய்துவிட்ட, மயிரால் அழகு செய்யப்பட்ட முன் கையில், வலம்புரிச்சங்கை அறுத்துப் பண்ணிய வளையலோடு மந்திரக் கயிற்றையும் கட்டி, வாளைமீனின் பிளந்த வாயைப் போல, முடக்கத்தை உண்டாக்கிச், சிவந்த விரல் அணிந்து கொண்ட மோதிரத்தையும், முன்பு பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை அணிந்த இடையில், அழகிய ஆனால் மாசு ஏறிய நூல் ஆடையோடு வண்ணங்களைக்கொண்டு எழுதப்படாத ஓவியம்போல கிடப்ப;

95