பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆளி அன்னானைக் கண்டேன் அயலே தூண்டா விளக்கனையாய்? என் மாயோ அன்னை சொல்லியதே' என்ற பாட்டைப் பாடிவிட்டு எதிரில் இருவர் வர, ஆணை மட்டும் பார்த்துப் பெண்களைப் பார்க்காத அக்கால இளைஞரின் நாகரீகம் எங்கே? அழகிய இளமகளிரை எங்கெல்லாம் காணலாம் என அலைபாயும் உள்ளத்தோடு, மகளிர் கல்லுரி வாயில்களிலும்: திரையரங்குத் திடல்களிலும் காத்துக் கிடக்கும் இன்றைய இளைஞரின் நாகரீகம் எங்கே எனக் கேட்டு முடித்தேன்,

அடுத்து 'தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை' என்ற-திருவாசகத் தொடரை எடுத்துக்கொண்டு. தருதல் என்றால், கொடுப்பவன் தாழ்ந்து, வாங்கிடுவான் உயர்ந்து நிற்கும்போது ஆள வேண்டியசொல், இங்கு "தந்த உன்தன்னை” எனக் கூறியதன் மூலம், சிவனைத் தாழ்ந்தவனாகவும், தன்னை உ ய ர் ந் த வ ன க வு ம் மதித்துள்ளரே மணிவாசகர், இது ஏன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டேன்.

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் தலைவர் சிந்தனைக்கும் அரியவேலை கொடுத்துவிட்டார்’ எனக்கூறிப் பாராட்டினர்.

மற்றுமொரு நிகழ்ச்சி: நான் வித்துவான் பட்டம். பெறாதநேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்கவந்த கோமான் மா. வீ. ராகவன் அவர்கள், அந்த ஆண்டு வித்துவான் தேர்வு எழு தி யி ரு ந் தார். அந்நிலையில், திருவத்திபுரத்திற்கு வருகைதந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம்பிள்ளை அவர்கள். ராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார்.

110