பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 3

தமிழக அரசு வழங்குந் தமிழ்த் தென்றல்

திரு. வி. க. விருது 25–8–1990

புலவர். கா. கோவிந்தன் அ வ ர் க ள் வடஆர்க்காடு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் செய்யாற்றில் 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் திரு. காங்க முதலியார்.அவர்களுக்கும், திருமதி சுந்தரம் அம்மையாருக்கும் பிறந்தவர்.

உரைவேந்தர் ஒளவை து ைர சா மியவர்களிடம் தமிழ்க் கல்விபயின்ற புலவர் அவர்கள் தம் ஆசானைப்போலவே சங்க இலக்கியப் பெரும்புலமையும்,சான்றாண்மையும் நிரம்பியவர். உலகப் புகழ்பெற்ற அறிஞர் கால்டுவெல் அவர்களின் ஒப்பரிய இலக்கண நூலாகிய திராவிடமொழிகள் ஒப்பிலக்கணத்தை .ெ மா ழி ய ா க் க ம் செய்தபெருமையும், பி. தி. சீனுவாச அய்யங்காரின் தமிழர்வரலாறு எனும் பெருநூலை இரண்டு தொகுதிகளாக மொழியாக்கம் செய்ததுடன் வரலாற்றுக் கருத்துக்களில் வழுவிய இடங்களிலெல்லாம் தமிழ்வளம் மிளிரச் செப்பம்செய்து வெளியிட்ட பெருமையும் புலவர்

அவர்களையே சாரும்.

சட்டமன்றத்தின் பேரவைத் துணைத் தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்புறச் செயல் ஆற்றினார்.

116