பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புலவர் கோவிந்தன், அவர்கள் தரணியில் மற்ற நாடுகள் எல்லாம் ஆட்சிமுறை அமைத்துக்கொள்ளாத காலத் திலேயே, உலகமே பார்த்து வியக்கத்தக்க விதத்தில்: அரசியல் நடத்திவந்த தமிழகத்தின் அருமை பெருமைகளை, இலக்கிய வாயிலாகவும், வரலாறுகள் வாயிலாகவும் நன்றாக அறிந்தவர். இச் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகப் புலவர் அமர்வது நமக்கெல்லாம் நல்வாய்ப்பினை அளிப்பதாக அமைந்திருக்கிறது' என்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டினார்கள்.

'தமிழ்நாட்டுச் சட்டமன்ற வரலாற்றில் பேரவைத் தலைவராக, அருந்தமிழ்ப் புலவர் இடம் பெறுவது இதுதான்் முதன்முறையாகும். இலக்கியப் பெருமை வாய்ந்த மன்னர் களால் புகழப்பட்ட புலமை தமிழ்நாட்டின் அரியணையில் ஏற்றப்பட்டுப் புகழப்படுகிறது' என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் பாராட்டினார்.

"திருமாளவன்', 'சங்ககாலப் புலவர் வரிசை', 'சங்க கால அரசர் வரிசை', 'க ல் டு .ெ வ ல் ஒப்பிலக்கணத் தமிழாக்கம்’, 'நற்றிணை விருந்து', 'குறுந்தொகைக் கோவை', 'இலக்கிய வளர்ச்சி', ' குறிஞ்சிக் குமரி’, 'நெய்தற்கன்னி', 'முல்லைக்கொடி', 'மருதநில மங்கை'; 'பாலைச்செல்வி', 'தமிழர்வாழ்வு', போன்ற 50க்கும் மேற்பட்ட அரிய பல நூல்களைப் படைத்துள்ளார்கள்.

புலவர். கா. கோவிந்தன் அவர்களின் பெருந்தமிழ்ப் பணியைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 1990-ஆம் ஆண் டி ற் கு ரி ய திரு. வி. க. விருதை வழங்கி மகிழ்கிறது'. நன்றி: தமிழக அரசு.

117