பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பு இயக்கத்தில் தம்மையும் இணைத்துக் கொண்ட புலவர் அவர்கள், அன்றிலிருந்து முழுநேர அரசியலில் அடியெடுத்து வைத்தார்.

1936 ஆம் ஆண்டில் 20 வது வயதில் புலவர் அவர்கள் தம்முடைய மாமன் மகன் கண்ணம்மாவை மணந்தார். 1941 ஆம் ஆண்டில் அவர், வேலூர் நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான்ம் நடத்திய ேவ ங் க ேட சு வர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில் புலவர் அவர்கள் பலஊர்களுக்குச் சென்று இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார்.

வித்துவான், பி. ஒ. எல்., எம். ஏ., என்பன புலவர் அவர்கள் பெற்றுள்ள கல்விப் பட்டங்கள் ஆகும்.

அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, செய்யாறு நகரிலிருந்து வெளிவந்த போராட்டம் வார இதழில் புலவர்”, புலவர் கோ, என்ற புனைப்பெயரில் இலக்கியக் கட்டுரைகளையும், கேஜி’, ‘நளன்’ என்ற புனைப் பெயர்களில் அரசியல் கட்டுரைகளையும் புலவர் அவர்கள் எழுதியுள்ளார்.

1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலில் புலவர் அவர்கள் செய்யாறு தொதிகுயில் வேட்பாளராகப் போட்டி யிட்டுவெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நாட்களில் (1962-67) சட்டமன்றத்திலேயே மிகுந்த கேள்விளை எழுப்பியவர் என்ற சிறப்பைப் பெற்றவர் நம் புலவர் அவர்கள்.

| 19