பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1967 இல் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் அமைந்த தி. மு. கழக ஆட்சியில் சட்டப் பேரவையின் துணைத்தலைவராகப் புலவர் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார். பின், புலவர் அவர்கள் 1969, பிப்ரவரி 22ஆம் நாள் ஒருமனதாகச் சட்டப் ேப ர வைத் த ைல வ ரா. க த் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் துணைத் தலைவராகவும், தலை வராகவும் பணியாற்றிய கால கட்டத்தில்தான்் L16) முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன என்பது இங்கே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல்பணி புலவர் அவர்களின் புறப்பணி என்றால், தமிழ்ப் பணி அவரது அகப்பணி ஆகும். சங்ககாலப்புலவர் வரிசை, சங்ககால அரசர்வரிசை, பண்டைத்தமிழர் போர் நெறி கால்டுவெல் ஒப்பிலக்கணத் தமிழாக்கம், முதலான நூல்கள் அவரது இலக்கியப் பணிக்குக் கட்டியம் கூறுவனவாகும். இலக்கியம், இலக்கணம், வரலாறு என்னும் முத்துறைகளிலும் மிகுந்த நூல்களைப் படைத்தவர் புலவர் கோவிந்தன் அவர்கள்.

தமிழால் வளர்ந்து. தமிழை வளர்த்து, தமிழ்த் தொண்டால் உயர்வு பெற்ற புலவர் கோவிந்தனார் அவர்களுக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் (1986) என்ற பட்டத்தினை வழங்கி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

பெருமைப்படுகிறது.

நன்றி:

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ச்

செம்மல்கள் பேரவை.

ද්ඨ. థ్రభ (ఫ్లో

120