பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்குக் காரணமாய் கபிலரின் செயலைப் போற்றிப் புகழ்ந்ததோடு, அவரையும் 'உலகெலாம் பரவிய புகழ் உடையார்; பலரும் புகழும் பெரும் புகழுடையார்; வாய்மை வழுவாப் பெரும் புலவன்' என்றெல்லாம் போற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார். -

உலகுடன் திரிதெரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று செழும் செய்நெல்லின் விளைகதிர் கொண்டு’’

- அகம்: 78 ஊனுணர் என்றோர் ஊர். அ வ் வூர் க்கு உரியோன் தழும்பன் என்பவன். அவன் வழுது ணைத் தழும்பன் என்ற காரணப் பெயராலும் அழைக்கப் பெறுவான். அவனையும், அவன் ஊனுரையும், அவ்வூணுாருக்கு அப்பால் உள்ள மருங்கூர்ப் பட்டினத்தையும் பாராட்டிய நக்கீரர், "தழும்பன் வாட்போர் வல்லவன். தமிழ்நாடு முழுதும் வென்றவன்' புகழ்ந்து நிற்பாருக்குப் பெரு ம் பொருள் கொடுக்கும் நாளோலக்கச் சிறப்பினன்' என்றெல்லாம் பாராட்டினார். இவ்வாறு அவனைத் தாம் பாராட்டியதால், பாராட்ட வேண்டிய அளவு அவனைத் தாம் பாராட்டியதாக, அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை. அவனை மேலும் பாராட்ட விரும்பினார். உடனே 'தழும்பன் துரங்கல் ஒரியார் (என்ற புலவர் பெருமானின்) பாராட்டைப் பெற்ற உயர்ந்த பெரும்புகழ் உடையான்’ என்று பாராட்டினார். பின்னரே அவர் உள்ளம் அமைதியுற்றது.

"வாய்வாள்

தமிழகப் படுத்த, இமிழிசை முரசின் வருநர்க்கு வரையாப் பெருநாள் இருக்கைத் தூங்கல் பாடிய ஒங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்'

-அகம்: 227