பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மொத்த புலவரை மதிக்கும் நக்கீரரின் பெருமைக்கு நல்ல எடுத்துக்காட்டு இவை இரண்டும்,

நக்கீரர், நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவனாகிய, தலையாலங்கானத்துச் ெச ரு .ெ வ ன் ற நெடுஞ்செழியனை மட்டுமே அல்லாமல், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறான்; கரிகாலன் கிள்ளிவளவன் ஆகிய பேரரசர்களையும். பிடவூர்க்கிழான் பெருஞ்சாத்தன், தித்தன், திதியன், எவ்வி. அன்னி, திரையன், பழையன், எருமை ஊரன், தழும்பன், முசுண்டைபோலும் குறுநில மன்னர்களை யும், தலைவர்களையும் பாராட்டி உள்ளார்.

ஆலத்துார் கிழார், ஆலம்பேரி சாத்தனார், இடைக் குன்றுார்க்கிழார், எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார், ஒளவையார், கல்லாடனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், குடபுலவியனார், குறுங்கோழியூர் கிழார், கூடலூர்கிழார், கோவூர்கிழார், பொதும்பில்கிழார், மகனார் மருதன் இளநாகனார். மாங்குடி மருதனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் முதலிய புலவர்கள், நக்கீரர் காலத்தில் வாழ்ந்தவராவர்.

பத்துப்பாட்டில், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரு நெடும்பாக்களும், நற்றிணையில் ஏழும், குறுந் தொகையில் எ ட் டு ம், அகநானூற்றில் பதினேழும், புறநானூற்றில் மூன்றும், நக்கீரர் பாடிய பாக்களாம்.

இவையே அன்றி, 1) கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி, 2) திருவிங்கோய்மலை எழுபது 3) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, 4) திருவேழு கூற்றிருக்கை, 5) பெருத் தேவபாணி, 6) கோபப்பிரசாதம், 7) காரெட்டு 8) போற்றித்

5