பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற் பண்பு கூதிர் காலத்துக் குளிரின் கொடுமையைக் கண்டு கோவலர் கொள்ளும் வருத்தமும், குளிரின் கொடுமை கண்டு அஞ்சுவதினும், பிறந்த ஊரை விட்டு வேற்றுார் செல்ல வேண்டுமே என அஞ்சும் அவர்கள் உள்ளத்தின் ஊர்ப்பற்றும் உணர்த்தப்பட்டிருக்கும் திறனும், குளிர் மிகுதியால், கன்றுக்கும் பால் கொடாது கடிய உதைக்கும் கறவைகளின் இயல்பு உணர்த்தப் ப ட் டி ரு க் கு ம் திறனும் நயந்து பாராட்டற்கு உரியன.

கோடைக்கு ஆரம்: கூதிர்க்குக் கத்துரி; கோடைக்கு விசிறி, கூதிர்க்கு அகிற்புகை, கோடைக்குத் தொகுவாய்த் தாகத்துக்குக் குளிர் நீர், கூதிர்க்குப் பகுவாய் தடவில் செந்நெருப்பு: எனக் காலங்களின் தட்பவெப்பநிலைக் கேற்றவாறு வாழும் பழந்தமிழர் வாழ்க்கையின் சிறப்பினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் பாங்கு பாராட்டற்குரியன. மாலையில் விளக்கேற்றி மலர் தூவி வணங்கல் மகளிர்க்கு அழகு; கணவனைப் பிரிந்த மகளிர் கோலங் கொள்ளுதல் கூடாது என்ற மகளிர்தம் மாண்புகள் உணர்த்தப் பட்டுள்ளன.

வென்றெழு கொடியொடு வேழம் சென்று புகும் குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயிலும்; நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றமும்; ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பும், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவும், வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளியும்; அதில் தென் வளி தருடம் நேர்வாய்க் கட்டளையும், அக்கால மக்களின் கட்டிடக்கலைச் சிறப்பை நன்கு உணர்த்துவனவாம்.

'புண்பட்ட வீரர்கள் போருக்குப் போக வேண்டாம்' என அன்புரை கூறி, அவர்களோடு நள்ளென் யாமத்தும் உறங்காது உறையும் பழந்தமிழ் அரசர்களின் பண்பு பாராட்டற்குரிய வகையில் கூறப்பட்டுள்ளது.

10