பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறை செயது விட்டனர். செழியன் படை வீரர்களின் போர்ச் சிறப்பு அறிந்த பகைவர் படை, அவரை எதிர்த்து நிற்க முடியாது புறங் காட்டி ஓடலாயிற்று. ஒடும் படையை விடாது துரத்திச் சென்றான் செழியன்.

கூடல் மாநகர்ப் போரில், சேரன் சிறைப்பட்டுப் போகவே பகைவர் படை சோழநாடு புகுந்து, தஞ்சை மாவட்டத்து ஆலங்கானம் என்னும் இடத்தில் பகைவர் படை அனைத்தை யும் அழித்து, அவர்தம், முரசு, குடை, பொருள் முதலாம் வளம் அனைத்தையும் வாரிக் கொண்டு, வெற்றி வீரனாய் வீடு திரும்பினான். புலவர்கள், செழியனைத் 'தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்' எனப் பெயர் சூட்டிப் பாராட்டினர்.

செழியனை, அவன் அவைக்களப் புலவர்களாகிய நக்கீரர், மாங்குடி மருதனார் மட்டுமல்லாமல், அள்ளுர் நண் முல்லையார், ஆலங்குடி வங்கனார், ஆலம் பேரி சாத்தனார், இ ைட க் கு ன் று ர் கி ழ ர் , ஈழத்துப் பூதன் தேவன் எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார், கல்லாடனார், குடபுல வியனார், குறுங் கோழியூர் கிழார், தத்தங்கண்ணனார், பரணர், பேராலவாயர், பொதும் பில்கிழார் மகனார், மதுரைக் க ண க் க | ய ன ர், மருதன் இளநாகனார், முது கூத்தனார், விற்றுாற்று வண்ணக்கன் தத்தனார் ஆகிய புலவர்களும் பாராட்டி உள்ளனர். - - -