பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச்சுத் தக்கோராவர்”. என்பன போலும் பொருள் அற்ற புல்லிய சொற்களை என் உள்ளம் புண்படுமாறு கூறிய, என் ஆற்றல் அறியா அவ்வரசர்களைப் போர்க்களத்தில் வென்று, அவர்களையும், அவர் போர் முரசுகளையும் ஒருங்கே கைப்பற்றி மீளேனாயின், என் ஆட்சிக் கீழ்வாழும் என்நாட்டு மக்கள், தாங்கள் சென்று பிழைப்பதற்கு வழி காணாது கலங்கி நின்று எங்கள் நாட்டு அரசன் நணிமிகக் கொடுங் கோலனாயினன்; என் செய்வோம் நாங்கள்’’ எனச் செயலற்றுக் கண்ணிர் விட்டுத் தூற்றும் பழி யொடு மிடைந்த ஆட்சி மேற்கொண்டான்போல் இழிவுடையேனாகுக ! ஓங்கிய சிறப்பினையும், உயர்த்த புகழினையும் உடைய வாங்குடி மருதன் முதலாம் புலவர் பெருமக்கள், என்னையும் என் நாட்டையும் பாடிப் போற்றார் ஆகுக! அவர் போற்றாமைக்கு உரிய பழிவந்து உறுக என்னை பொருள் கொடுத்துப் புரக்கப்பட வேண்டியவர்களாய பாணன், பொருநன். கூத்தன் முதலாம் இரவல் மாக்கள், கண்ணிர் விட்டுக் கண்கலங்கி நிற்குமாறு. அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி புரியலாகன் வறுமை வத்தடை என்னை!' என வஞ்சினம் கூறி நின்றான். - -

வஞ்சினம் உரைத்து விரைந்து தேர் ஏறிப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு விட்டான். தெடுஞ்செழியன்.போர்க்களத் தில், கடலிடையே செல்லும் கலம் ஒன்று, காற்று சுழன்றடிக்கச் செல்லும் இடம் இது; செல்லலாகா இடம் இது என்ற வரையறை இன்றிக் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு எங்கும் ஒடித்திரிவதே போல், களிறுகள், பகைவர் படை தடுவே புகுந்து பெரும் பாழ்செய்து களத்தை எளிதாக்க, அவற்றைத் தொடர்ந்து வீரர்கள் வேலேந்திச் சென்று, பகை வேந்தர் படைகளைப் பாழ்செய்து, வந்த பகைவருள், யானக்ை கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைச்

8