பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

சேர வேந்தருள், செங்குட்டுவன் சிறந்து விளங்குவது போலவும், சோழ வேந்தருள், கரிகால் பெருவளத்தான்் சிறந்து விளங்குவது போலவும், பாண்டியருள் சிறந்து விளங்கியவன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், செழியன் அரியணை ஏறுங்கால் நளிமிக இளையனாவன். ஆனால் அவன் ஆட்சிக்கீழ் வந்துற்ற பாண்டிய நாடு பொதிய மலைப் பல்வளமும், கொற்கைத் துறை முத்தும் பெற்றுப் பெருஞ் செல்வத்தால் பொலிவுற்றுத் திகழ்ந்தது. இதைக் கண்ணுற்றனர் அவன் பகை அரசர்கள். யானைக் கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், பெயர் அறியாச் சோழனும், திதியன், எழினி, எருமை யூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகியோர் அவன் பகைவர். இவர்கள் எழுவரும் ஒன்று கூடி 'நாமோ நாற்படையும் நனிமிகப் பெற்ற அவனை வென்றால் நாம் அடையும் பொருளோ மிகப் பலவாம்' என எண்ணி அவனை அவனுர்க்கே சென்று எதிர்த்தனர். -

- இளைஞனே எனினும் ஈடிலாத்திறன் உடையனாய்

நெடுஞ்செழியன் பகைவர் செயல் அறிந்தான்்; ஆற்றல்

மறவரும் ஆன்றோரும் கூடிய அவையினரை நோக்கி,

'யாமோ, யானையும், தேரும், மாவும், மறவரும் நிறைந்த

பெரும் படை உடையேம். இவனோ இளையன்;

இத்தகையான் நாட்டை நின்று புகழ்வார். நம்மால்

7

తో