பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவணியில் உழவு தொடங்கினால் தான்் முப்போகம் காண இயலும். இது நன்செய் நில உழவுக்கு. புன்செய் நில உழவுக்கும் இது பொருந்தும்.

மூன்று அல்லது நான்கு திங்கள்களில் பயன் அளிக்கும் எள் , கொள், போலும் கூலப்பயிர்கள் மழையை எதிர்நோக்கி வி ைள வ ன. அவற்றை ஆவணியில் விதைத்தால் தான்், புரட்டாசி வரை அவ்வப்போது பெய்யும் மழையும் , ஐப்பசி-கார்த்திகையில் பெய்யும் பெரு மழையும் பெற்று விளைந்து விடும். ஆகவே அவற்றிற்கும் உழவுத், தொடக்கம் ஆவணி தான்்.

ஆவணியில் உழவு தொடங்க வேண்டின் , அப்போது தப்பாது மழைபெய்தல் வேண்டும். நாடாளும் அரசன் நல்லவன்; அல்லன கடிந்து அறமே செய்யும் நல்லரசு உடையான். அதனால் , அவன் நாட்டவரும் நல்லவரே; அரசும் நல்லரசாக நாட்டவரும் நல்லவராகும் நிலையில் , அந்நாட்டில்மழை பொய்த்துப்போவது இல்லை.

  • இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு ’’ (குறள் 545) ,
  • வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது; நில வேந்தன் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர்

- . இருந்த நாடு’’ (சிலம்பு :15; 145.147)- என்பர் ஆன்றோர். அதனால் அம்மக்கள் எதிர்பார்த்தவாறே மழை, பெய் ' எனப்

பெய்யும். பண்ணுக்குரிய மைந்தர்கள் எதிர்பார்த்தவாறே

12