பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீருண்டு கறுத்த மேகம் , கொண்டல் கொண்டலாக எழுந்து, மலை முகடு நோக்கி விரைந்து, மண்ணையும் , மக்கள் மனதையும் ஒருசேரக் குளிர்ச் செய்தது. வத்த புதுமழை , கோடையின் கொடும் வெப்பத்தினின்றும் விடுதலை பெற்றுத் தந்த , மிதமான குளிர்நிலையில் அல்லாமல் , فابنهمهماته , உள்ளத்தையும் நிலை குலையப் பண்ணும் , கடுங்குளிர் நிலையினதாக அடைமழையாய்ப் , பெருமழையாய்ப் பெய்து ஒய்ந்தது.

பாரோர் அ ைன வ ர் க் கு ம் பேருவகை அளித்த அப்புதுமழையால் , இடர் உற்றார் சிலரும் இல்லாமல் இல்லை. இரவு பகல் எப்போதும் , தம் ஆணி ைர ச் செல்வங்களோடும் , ஆடுகளோடும் , திறந்த வெளியிலேயே வாழ்க்கை நடத்தும் இயல்பினர் ஆவர். மேலும் , பெரு வென்னம் பாயும் நிலப்பகுதியும் , அந்நீர் குளமாகத் தேங்கி நிற்கும் நிலப்பகுதியும் , மேய்ச்சலுக்கு உதவா. மேலும் , அடைமழையால் ஆடுகள் இறந்து போகவும் செய்யும்.

  • விசும்பின் துளி விழின் அல்லால் பசும்புல் தலை காண்பு அரிது’ என்பதை உணர்ந்தவர்கள் ஆயர். கோடையால்;காய்ந்துபோன புல்லும் பூண்டும் கிடைக்காமை கண்டு வருந்தியவர் அவ்வாயர். அதனால் , பசும்புல் தலை காட்ட வானம் பெய்யாதா என மழை வரவை விரும்பி எதிர்பார்த்தது உண்மையே. ஆனால் பெய்யத் தொடங்கிய மழை , மண் மேடுகளையும் , கரைத் தே டச் செய்யும் பெருமழையாகி, மேலே கூறிய கேடுகளை யெல்லாம் - விளைவித்து விட்டமையாலும் , திறந்த வெளியில் திரிந்து தொழில் புரிந்து கொண்டிருந்த தம் மேனியைத் , தம், திரைகளைப் போலவே முழுக்க நனைத்து விட்டமையாலும் . ஆயர்கள் அப் பெருமழையைச் சிறிதே வெறுக்கலாயினர்.

33