பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மலை குலைந்தாலும் நிலை குலையதவன்' என நிலை குலையாமைக்கு எடுத்துக் காட்டாக நிற்பது மலை கூதிர்காலத்துக்குளிர், அம்மலையையும் நடுங்கச்செய்யவல்ல கொடுமை மிகுந்திருந்தது.

'வையகம் பனிப்ப வலனேர்பு வனை இப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனை இய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவைகள் படிவன வீழக் கறவை கன்றுகோ ளோழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்' — 1-12.

உரை: பொய்யா வானம் = பருவம் தவறாமல் பெய்யும் மேகம். வையகம் பனிப்ப-உலகெல்லாம் குளிரால் நடுங்கும் படியாக வலன் ஏர்பு - வலமாக எழுந்து. - - புதுப்பெயல் - கார் காலத்து முதல் மழையை.

பொழிந்தென - பெய்ததாக. ஆர்கலி முளைஇய - அம் மழையால் பெருகிய பெரு

- - வெள்ளத்தை வெறுத்த

கொடுங்கோல் கோவலர்-கொடிய கோலினை உடைய

இடையர்

ஏறுடைய இனம் திரை - ஏறுகளையுடைய ஆடுகளையும், - - ஆனிரைகளையும், எருமைகளையும்

1 8 -