பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மட்டோ! ஒரு சிறு பொழுதும் ஓய்ந்திராதுக ஓரிடத்தும் அடங்கியிராமல், ஒடுவதும், ஆடுவதும், உயர் மரம் ஏறித்தாவுவதுமாகத்திரியும் இயல்புடையன குரங்குகள். அக்குரங்குகளையும், அவற்றை யெ ல் ல ம் மறந்து உடல்குன்றி அடங்கிக்கிடக்குமாறு செய்து விட்டது குளிர். அம்மட்டோ! பறவைகள், தம் இறக்கைகளை விரித்து விட்டால் ஓயாது பறக்கும்; உயர உயரப் பறக்கும்; விரைந்து விண்நோக்கிப் பறக்கும். ஆனால் குளிரின் கொடுமை, அவை, தம் இ ற க் ைக க ைள விரிக்கவும் இயலாவாயின. அதனால் பறக்க எழும் அப்பறவைகள் பறக்க மாட்டாது மண்ணில் வீழ்ந்து மடியலாயின.

கறவைகள், கன்றின் மீது பேரன்பு கொண்டவை; கன்று களுக்குப் பால் தருவதற்காகவே மேய்புலத்திலிருந்து மனை நோக்கி விரையும் இயல்புடையவை. கன்றுகளைத் தம்மிடமிருந்து பிரிப்பதைப் பெறாதவை. அதேபோல் கள்றுகளும், தாய்ப்பசுக்களைக்கண்ட அளவே, துள்ளி ஓடி, முட்டிப் பால் குடிக்கத்துடிப்பவை, ஆனால் குளிர், கறவை, என்று ஆகியவற்றின் அவ்வியல்புகளை அழிக்கும் கொடுமையுடையதாகி விட்டது. அதனால், தாயைக் கண்டு பால் உண்ணும் நினைவே இல்லாமல் தாம் கிடந்த இடத்திலேயே கிடக்கலாயின கன்றுகள். ஒரே வழி கன்றுகள் பசிமிகுந்து பால் உண்ணத் தாயை அணுகினால், கன்றைக் காணமாட்டோமா? கன்று மடியில் வாய் வைத்துப்பாலை உண்ணாதா 6T or ஏங்கும் பசுக்கள், கன்றுகளை அணுகவிடாது, தம் புறங்காலால் உதைத்து உதைத்துத் துரத்துவவாயின என்னே குளிரின் கொடுமை! -

17