பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுங்கலாயிற்று. தாம் த னி த் த னி யாக ப் பிரிந்து கிடப்பதால் வீசும் காற் று, தம் மேனியைத் தழுவி வீசுவதால் குளி ந டு க் க ம் மிகுதியாயிற்று என்பதை உணர்ந்து கொண்ட ஆயர்கள் , ஒருவர் மெய் , ஒருவர் மெய்யோடு இரண்டறக் கலந்து விட்டதோ எனக் கருதுமளவு நெருங்கி இருந்தால் குளிர் ஓரளவு குறையும் என எண்ணி, அவ்வாறே நெருக்கமாக இருந்தும் பார்த்தனர். ஆனல், அதனாலும் பெரும்பயன் விளையவில்லை. குளிர் அடங்க வில்லை. குளிர் மிகுதியால் மேல்வாய்ப்பற்களும் கீழ் வாய்ப்பற்களும் மோதிப் பறை கொட்டலாயின.

அதனால், குளிரின் கொடுமையிலிருந்து விடுதலைபெற வேறு வழி காண முயன்றனர். தம் கையோடு எடுத்துச் செல்லும் தீக்கடை .ே க | ல | ல் தீ முட்டிப் பலரும், அத் நெருப்பைச் சூழ நெருங்க அமர்ந்து கொண்டு தம் இரு உள்ளங் கைகளையும் அந் நெருப்பிற்கு அணித்தாக வரித்துக் காட்டுவதும், சூடு ஏறிய உள்ளங்கைகளால் தம் இரு கன்னங்களையும் தடவிக் கொடுப்பதும் ஆகிய குளிர்காய் செயலை, மாறிமாறி மே ற் .ெ கா ன் டு தம் குளிரைத் த னி த் து க் கொள்ளும் முயற்சி மேற் கொண்டிருந்தனர். x- .

ஆயர், தம் ஆனிரைகள், வயிறுஆா மேய்வான் வேண்டித் தம் துயரையும் மறந்து, அவற்றைப்புல் கிடைக்கும் மேட்டு நிலங்களுக்குக் கொண்டு சென்று விட்டனர். ஆனால், குளிர், அவ்வானிரைகளையும் .ெ க டு ைம செய்யாது விட்டிலது. குளிர் மிகுதியால், அவை, தம் பசியையும் உணராவாயின. பசி அறியாது போகவே, புல் மேய்வதே அவை அறவே மறந்து போயின. மேயும் தொழிலையும் மறக்கடிக்கப் பண்ணும் கொடுமையுடைய தாயிற்று குளிர். . . . . . .

16