பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்று மேய விட்டனர். ஆனால், பெருமழை பெய்வதற்கு முன்னர்த், தம் வாழிடங்களை அ டு த் ேத மேய்த்து வந்தமையால் வேண்டும் போதெல்லாம், தம் மனைகளுக்குச் சென்று வந்தும், விரும்பும்போதெல்லாம், மனைவி மக்களைக்கண்டு வந்தும், இ ன் பு ற் றி ரு ந் த வ ர் க் கு, இப்போது அவ்வாழிடங்களை விடுத்து மேட்டுநிலம் நோக்கி" நெடுந்தொலைவு செல்ல நேர்த்தமையால், அவ்வாய்ப்பு இல்லாது போகவே, தனித்து விடப்பட்டது, போன்ற உணர்வுக்கு ஆளாகி அல்லல் உற்றனர்.

தனிமையுணர்வு, உள்ளத்தை வருத்தும் அதே நிலையில் கோடைவெய்யிலின் கொடுமையும், கொட்டும் மழையின் கொடுமையும், முடியையும், முகத்தையும் தாக்காவாறு தடுத்து நிறுத்துவான் வேண்டி, கைபோல் அகன்று நீண்ட இதழ்களைக் கொண்ட பெரிய பெரிய காந்தள் மலர்களை, நெருங்கத் தொகுத்த கண்ணியைத், தலையில் சுற்றிக் கொள்ளும் ஆயர்தம் பழக்க வழக்கமும் அவர்களுக்கு இன்னல் தருவவாயிற்று.

துயர் தணிக்கச் சூடிக்கொண்ட அத்தலைமாலை, இப்போது மழையால் நனைந்து ஆயர் துயரை மேலும் பெருக்குவதாயிற்று. மழை நின்று விட்டது : மழைநீரால் நனைவது இப்போது இல்லை. ஆனால் மழை பெய்யும் போது , நீரை உள்ளங் கைபோலும் தம் இதழ்களில் தேக்கிக் கொண்ட காந்தள் மலர்க் கண்ணியிலிருந்து, நீர் சொட்டுச் சொட்டாக ஆயர் முகத்திலும், தோளிலும் தொடர்ந்து விழுந்து துயர் விளைக்கலாயிற்று. -

மழை நனைந்த மேனியைத் தலை மாலை யிலிருந்து - சொட்டும் துளிகளும் நனைக்கவே, உடல் குளிர் மிகுந்து

15