பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கானாற்றங்கரையும் கானற் சோலையும்

கூதிர் காலம் மெல்ல மெல்ல கழியத் தொடங்கிற்று, கார்த்திகையும் பிறந்து விட்டது. கார்காலத் தொடக்கத்து மழையில் முளைவிடத் தொடங்கிய செடிகொடிகள் மலர் ஈனும் அளவிற்கு வளர்த்து விட்டன. ஆங்காங்கே காணப் படும் சிறுசிறு தூறுகள் தோலும் முசுண்டையும் பீர்க்கும் பூத்துக் குலுங்கலாயின. மெல்லிய சிறுசிறு செடிகளாகப் படர்ந்திருக்கும் முசுண்டையில் புறத்தே சிறுசிறு புள்ளிகளை யுடையவராய தூய வெண்ணிற மலர் க ளு ம், பீர்க்கில் பசும்பொன்போலும் நிறம் வாய்ந்த மஞ்சள் வண்ணமலர் களும் மலர்ந்து மயங்கி மனமகிழ் காட்சி அளிக்கலாயின.

புரண்டோடும் பெருவெள்ளத்தால், வெள்ளக்கால்களில் பண்டு படித்திருந்த கரியசேறு எல்லாம் அகன்றுபோகஅற்றுப்போகத் தூய வெண்மணல் அடியிட்டு விட்டன. அவ்வாற்றுப் படுகைகளில், தெளிந்த நீர், சின்னஞ்சிறு ஒ ைட யாக ஓடத் தலைப்பட்டுவிட்டது. வெள்ளநீரை எதிரிட்டு ஏறிப்பாயும் இயல்புடைய கயல்மீன் கூட்டம், அச் சின்னஞ்சிறு ஓடைகளில் காணப்படவே, வெளிர்திறப்பச்சைக் கால்க்கையும், மென்மையான சிறகுகளையும் உடைய கொக்குகளும். செவ்வரி படர்ந்த, நெடிய கால்களையுடைய நாரைகளும், ஒடி ஒடி, அக்கயல்மீன்களைக் கவர்ந்து உண்ன, அவ்வோடையின் இருமருங்கிலும் பெருங்கூட்டமாய்க் ةRبها بد விட்டன. - . .

பருவமெல்லாம் ஓயாது பெய்து பெய்து ஓய்ந்துபோனமேகம்