பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னிடம் இருந்த நீரெல்லாம் வறண்டுபோகவே, கார்முகில் எனும்பெயர் இழத்து வெண்முகில் எனும் பெயர் உடையதாகி அறியாமைப் பட்டுப்போனதோடு, நீ ர் .ெ க | ண் டு, கார்முகிலாகிய காலத்தில், பொறை தாங்கமாட்டாது வானில் தாழப்படிந்திருந்த நிலைமாறிப், பருகிய நீரையெல்லாம் பெருமழையாகக் கொட்டித் தீர்த்துப் பொறையும், குறைந்து விடவே, வானத்தின் உச்சிக்கே சென்று உலாவியவாறே சிறுசிறு துவலைகளைத்தூவும், தன் இயல்புக்கு மாறான (அதாவது பெருமழையாகக் கொட்டும் தன் இயல்புக்கு மாறான) தொழிலைக் கற்கவும் தொடங்கிவிட்டது.

முல்லை நிலத்தின் ஒருகோடியில் உள்ள குறிஞ்சி மலைக்காட்டில் பெய்த பெருமழை, முல்லை நிலத்தை வெள்ளக் காடாக ஆக்கி விட்டதோடு, அந்நிலத்து ஆயர்க்கும் அவர்தம் நிரைகளுக்கும் சொல்லொணாத் தொல்லை விளைவித்துவிட்டு, அம்முல்லையின் மறுகோடியில் உள்ளதான் மருதநிலத்தவர்க்கு, வளம்பெருக்கும் துணையாய் அமைந்து, "கொடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை’ எனும் புகழுக்கும் உரியதாகி விட்டது.

- மழை பொய்க்காது என்ற உறுதிப்பாட்டில், கார்காலத் தொடக்கமாகிய ஆவணியில், நன்செய் வயல்களில், நெல் விதைகளைத்தூவி வைத்தனர். உழவர் பெருமக்கள். குறிஞ்சி போல் காணுமிடமெல்லாம் குன்றுகள் நிறைத்தே, முல்லை நிலம் போல், கானுமிடமெல்லாம் புதர்களே நிறைந்தோ, இல்லாமல் சமன் செய்து, வரப்பு அமைத்து, வாய்க்கால் வெட்டி வயலாக்கி இருக்கும் காட்சி கண்ணுக்கு விருந்து அளிக்கும். நிரை மழை பெய்யும் ஆகவே, நீர்த்தட்டுப்பாடு இல்லை என்பதால், வயல்களையும்

21