பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவயல்களாகவே அமைத்திருந்தனர். வாப் புக ளு ம் உயர்ந்திருந்தன. அதனால் வயல்களில் நீர் மிகுந்து நிற்கவே, விதைத்த நெல், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய இந்நான்கு மாதங்களில் நன்கு களைத்துச் செழித்து வளர்ந்து நிற்க வெளிப்பட்ட பருத்தகதிர், பால் ஏறி முற்றிப், பொறை தாங்கமாட்டாது, தலை வணங்கிக் கிடந்து நிறைபயன் தந்தது.

அதுபோலவே மண்தரும் வளச்செழிப்பால் பருத்த அடியை உடையவாகிய பாக்கு மரங்களின் உச்சியில், பச்சோலை சலசலக்கும் மடல்களுக்கு அணித்தாக நீலமணி போலும் நிறம் வாய்க்கப்பெற்று மரத்தின் கழுத்து எனக் கூறப்படும் பகுதியில், அ ம் ம ட ல் க ளு க் கு இடையில் வெளிப்பட்ட பாளை விரிந்து வெளிப்பட்ட கழுகத்தாறுகளில், இனியநீர் கொண்டிருப்பதால் தி ர ட் சி உடையவாகக் காய்த்திருக்கும் பச்சைப்பாக்குகள், சிறிது சிறிதாக நீர் வற்றிக் களிப்புக் கூடிமுற்றலாயின.

இவ்வாறு நீர் வளமும், நிலவளமும் நிறைபெருள் வளமும் உ ைட ய வ க ப் பெருமைபெற்ற அப்பகுதி, கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்வளிக்கவும் தவறவில்லை. கழுகஞ் சோலைகளை அடுத்துள்ள நிலப்பகுதியில், ஆங்காங்கே காணலாம் மணற்மேடுகள் தோறு ம் , மணத்தாலும், நிறத்தாலும் பல்வேறு வகைப்பட்ட மலர்கள் மலர்ந்துகிடக்க, அம்மலர்களைத்தாங்கி நிற்கும் தண்டுகள் ஒடுங்கும் நிலையில், அம்மலர்களில் படிந்து கிடக்கும் நீர்த்துளிகள், அம் மலர் களி ன் நிறத்திற்கு ஏற்பவும், அவற்றின்மீது ஞாயி ற் றி ன் ஒளிவிழும் கோணத்திற்கு ஏற்பவும் பல்வேறு நிறங்காட்டி மின்னி அழகு காட்டும்.