பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கடுங்குளிரையும் பொருட்படுத்தாக் - - கட்குடியர்

கார்காலத்துப் பெ ரு ம ைழ பெய்து ஓய்ந்துபோக, வந்துற்ற கூதிர்ப்பருவத்துக் குளிரால் நடுங்கும் முல்லை நிலத்து ஆயர், ஆனிரை, அந்நிலத்துப் பறப்பன, நடப்பன, ஆகிய உயிரினங்களின் துயர்நிலையைக் கண்டு கலங்கிய வாறே, அம்முல்லை நிலத்தை அடுத்துள்ளதான் மருத நிலத்தில் அடியிட்ட புலவர்க்கு, ஓர் உண்மை புலனாயிற்று.

கால்நடைகளே நம்செல்வம். அவற்றிற்குச் சிறுகேடும் உறாவாறு காப்பது மட்டுமல்லாமல், அவை வயிறார உண்டு வளங்கொழிப்பதற்குப் பசும்புல் பெருகக் கிடைக்கும் இடங் களுக்குக் கொண்டு சென்று மேய்ப்பதும் வேண்டும். ஆனிரை ஒம்பும் அப்பணியில், மனையகத்தே இருந்து மகிழும் வாழ்க்கை நலத்தை இழந்து நம் உடல்நலக்கேடுற தேரினும் கவலை இல்லை என எண்ணும், தன்னலம் கருதாப் பிறர் நலம்பேணும் பெரியோர்களையே, அக்குளிர் வாட்டும். அத்தகைய வாழ்க்கைக் குறிக்கோள் எதுவும் இன்றி, உண்டு உடலை உரம்பெற வளர்ப்பதும், கள்ளுண்டு களிப்பதும் தவிர்த்து வேறுவாழ்க்கை என்பது இல்லை எனக்கொண்டு திரியும் கயவர்களை, அது கொடுமை செய்வது இல்லை.

தாம் மேற்கொண்டிருக்கும் தொழில்முறையால், சிறு குடிலே ஆயினும், குளிர் உள்புகாவாறு காக்கவல்லதான் மனைகளில் இருக்கவிடாது, குளிரொடு கலந்த காற்று வீகம் மேய்புலங்களுக்குத் துரத்தப்படும் ஆயர் போன்றாரை மட்டும் அதுகொடுமைபடுத்தும், குளிர்காற்று நுழைந்து

26.