பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடாவாறு கட்டப்பட்ட ஏழடுக்கு மாளிகை வாழ் செல்வர் களையும், பருவ நிலைக்கொடுமைகளை மாற்றி இன்பம் பயக்கவல்ல வழிமுறைகளை வகுத்துக்கொண்ட வல்லார் களையும், அக்குளிர் அணுகுவதும் செய்யாது.

கடமை மேற்கொண்டு, கணவன்மார்கள் பிரிந்து போயிருக்க, மனையகத்தே, துணை இல்லாது தனித்திருக்கும் நிலைபெற்று எளியராகிவிட்ட மனைவியரை மட்டுமே அது கொடுமை செய்யும்.

இந்த உண்மைகளை உணர்ந்த புலவர், உணர்ந்த உண்மைகளை உரைப்பான் தொடங்கி, முதற்கண் கள்ளுண்டு திரியும் காளை ஒருவனைக் காட்டுகின்றார்.

பெய்த பெருமழையெல்லாம், குறிஞ்சியில் மலை யினின்றும் உருண்டுபாயும் அருவிகளாகவும், முல்லைக் கானாறுகளாகவும் வடிவெடுத்து, மேடுபள்ளம் அற்றதான் மருதநிலத்துள் புகுந்ததும், ஆறு எனும் பெயர்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்று வெள்ளநீரை அதன்போக்கில் போவதைத் தடுத்து இருகனைகளுக்கு இடையில் ஒழுங்காகக்கொண்டு சென்று, விளைநிலங்களுக்குப் பயன்கொள்ளும் நிலையைத், தமிழகம் பண்டே அடைந்து விட்டிருந்தது.

அதனால், மருத நிலத்து மாநகர்கள் எல்லாம், அத்தகு பேராற்றங் கரைகளிலேயே தோன்றலாயின. மருத நிலத்து மாநகர் நோக்கி வழி நடைப் பயணம் மேற்கொண்ட புலவர், மருதநிலத்து எ ல் ைல யை அடைவதற்கு முன்பே, அம்மாநகரத்தில் வானளாவ கட்டப்பட்டிருந்த ஏழடுக்கு. மாளிகைகள், அவர்க்குக் காட்சி அளித்துத், தொடக்க காலத்தில் சுற்றுராய்த் தோன்றிப் பையப்பைய மாட

27.