பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாளிகைகளைக் கொண்ட மாநகராய் வளர்ந்து நிற்கும், அம். மாநகரத்துப் பழம் பெருமையினையும், அத்தகு மாட மாளிகைகள் தோன்றுவதற்குக் காரணமாம் செல்வச் செழுமையினையும், புலவர் நினைவில் புகுத்தி நிழலாடச் செய்து விட்டது. -

தொலைவில் தோன்றும் அம்மாநகரத்துப் பழமைச் சிறப்பையும் செல்வச் செழுமையினையும் எண்ணி, எண்ணி இறும்பூதெய்தியவாறே தடை மேற்கொண்ட புலவர், பேராற்றங்கரை அடைந்ததும் இருமருங்கிலும் நிற்கும் கரைகளின் ஊடை ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் இன்பக் காட்சியை சிறிது நின்று கண்டுகளித்து விட்டு, மறுகரைஏறி மாநகர்த் தெருக்களில் அடியிட்டார். தெருவுகள், தாம் கண்டு வந்த ஆற்றுப் படுகைபோல் அகன்றிருக்க, அதன் இருபக்கத்தும் மாடமாளிகைகள், ஒன்று உள்ளே ஒன்று புறத்தே, ஒன்று நெடியது; ஒன்று குறியது; என இல்லாமல், ஆற்றின் இருபக்கத்தும் அமையப்பெற்ற இருகனைகளைப் போல், ஒரே சீராகக்கட்டப் பெற்றிருக்கும் காட்சியைக் கண்டு கழிபேருவகை எய்தினார், அந்நிலையில், அவரைக் கடத்து சென்றார் சிலர். செயல், அளவிறந்து பெருகிவிட்டால், செல்வமும் மக்களை எப்படி யெல்லாம் மாக்களாக்கி விடுகிறது என்பதை உணர்த்தி, அவர் உணர்வினைச் சிறிதே கலங்கச் செய்துவிட்டது.

பகல் கழிந்து அந்திப்போது ஆகிவிட்டது. கடமை யுணர்வு மக்களெல்லாம், மனைப்புறத்துக் கடமைகளை முடித்துக் கொண்டு, மனைக்கண் சென்று சேர்ந்திருக்க வேண்டிய நேரம். மேலும் பெருமழை பெய்து ஓய்ந்துவிட்ட வெண்மேகம் சிறுசிறு தூசல்களைத் தூவிக்கொண்டே இ ரு ந் த து . அந்நிலையில், மளைப்புறத்தே கடமை

28.