பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பினும், குளிருக்கும் தூவலுக்கும் அஞ்சி மனையை விடுத்து வெளிப்பட்ட எவரும் நினையார். அத்தகு நேரத்திலும், அத்தகு சூழ்நிலையிலும், அச்சிலர், தம் மனம்போன போ க் கி ல் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை நோக்கினார் புலவர். செல்வச் செழுமையில் சீராட்டி வளர்க்கப்பட்டவர்கள் அவர்கள் என்பதை அவர்தம் கட்டுடல் காண்பித்தது பருத்த தோள். அப்பருமையே அவர் தோள் க ளு க்கு அழகூட்டுவதாய் இருந்தது. எத்தகைய திண்ணிய பொருள்களே ஆயினும், மோதி அழிக்கவல்ல உரத்தையும் அத்தோள்கள் பெற்றிருந்தன. தோள்போலவே பிற உறுப்புகளும் உரம்பெற அமைந்திருந் தமையால், அவர் உடல் மு று க் கே றி முழுவலி கொண்டிருந்தது.

உண்டு உடல் உரத்தைப் பெற்றிருந்ததற்கேற்ப உணர்ந்து உள்உரம் பெற்றவர் அல்லர் அவர்கள். சிறுசிறு துவலைகளாக மழை பெய்துகொண்டிருக்கும்போது,நனைந்த ஆடையினைக் களைந்தெறிந்துவிட்டு, உ டலே ற்கு ம் ஆடைகளை, மெய்மறையப் போர்த்திக் கொள்வதையே, அறிந்தோர் விரும்புவர். ஆனால் இவர்களோ, கழுநீர், குவளை, தாமரைபோலும், மேனியில் பட்டால், தண் எனக் களியூட்டும் மலர்களால் ஆன மாலையைத் தலையில் சுற்றிக் கொண்டு, வி ரி த் து ப் போர்த்துக்கொள்ள வேண்டிய மேலாடையை, ஒன்றாகச் சுருட்டி, ஒருமுனை முன்பக்கமும் மறுமுனை பின்பக்கமும் தொங்கும் வண்ணம், தோள்மீது போட்டுக்கொண்டிருந்தனர். இத்தகு .ே க | ல த் தோ டு, உணர்வு அற்ற கட்டைகளாய்த் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள் அந்த அளவோடு நில்லாமல், பேரூர்த் தெருவில் இடம் பெற்றிருக்கும் மதுக்கடைகளைக் கண்டபோதெல்லாம் அக்கடைகளுள் நுழைந்து, வண்டுக் கூட்டங்கள் மொய்த்துக் கிடக்கும் கள்ளைத் தம் ஆசை தீரும்வரை உண்டு தீர்த்து விட்டே அப்பால் செல்வாராயினர்.

29