பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்

ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் - படலைக் கண்ணிப்பரேர் எறுழ்த் திணிதோள் முடவை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்துளி பேணார், பகல் இறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர'

(29–35) உரை : மாடம் ஓங்கிய=மாட மாளிகைகள் உயர்ந்த, மல்லல் மூதூர்=பல்வேறு வளங்களையும் கொண்ட பழைய

ஊரின் கண், ஆறுகிடந்தன்ன = ஆறுகிடந்தாற் போன்ற. அகல் நெடும் தெருவில்=அகன்ற நெடிய தெருக்களில். படலைக் கண்ணி=தாமரை, குவளை, கழுநீர் முதலிய மலர் களோடு தழை விரவித் தொ டு த் த மாலையையும். பரேர்=பருத்த அழகினையும் உடையவராகிய, எறுழ்=வலியினையுடைய. திணி தோள்=இறுகின தோளினையும். முழுவலி மாக்கள்=நிரம்பிய மெய் வலியினையும் உடைய

கீழ்மக்கள். வண்டுமூசு=வண்டுகள் மொய்க்கும். தேறல் மாந்தி=கள்ளை உண்டு மகிழ் சிறந்து=மகிழ்ச்சி மிக்கு. துவலைத் தண் துளி=தம் மேல்விழும் துவலையாகிய சிறுசிறு. நீர்த்துளிகளை. பேணார்=பொருட்படுத்தாமல். - இருகோட்டு அறுவையர்=முன்னும் பின்னும் தொங்கவிட்ட

- மேலாடை உடையராய். பகல் இறந்து=பகல் கடந்துபோன அந்திப்போதிலும். வேண்டுவயின் திரிதர=தம் மனம்போன இடமெல்லாம்

. திரிதலைச்செய்ய.

30