பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மனை விளக்கேற்றும் மகளிர் நலம்

மாநகர் எல்லைக்குள் அடியிட்ட புலவர் உள்ளத்தைக், குளிரையும் .ெ பா ரு ட் ப டு த் தா து கள்ளுண்டு திரியும் கட்டிளங்காளையர் காட்சி வருத்திவிட்டது என்றாலும், அம்மாநகர் வீதிகளில் அடுத்தடுத்துக்கான நேர்ந்த காட்சிகள் சில, அவரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தி விட்டன.

மாநகர் எல்லைக்கண் கண்ட காட்சியால் கலக்கமெய்திய கண்களை, நீண்டுகிடக்கும் வீதிகளில் ஒடவிட்ட அளவில், அவ்வீதியின் இருமருங்கிலும் உள்ள மனைகள் தோறும் விளக்குகள் எரியத் தொடங்கலாயின. வானம் வெண்முகிலால் மூடப்பட்டிருந்தது. அதான்ல், பகற் பொழுதில் கழிந்தகாலம் எவ்வளவு? கழிய வேண்டியகாலம் எவ்வளவு என்பதைக் கணித்து அறிவது இயலாததாயிருந்தது. அவ்வாறாகவும், மனைகளில், மாலை விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டனவே! மாலைப்போது வந்து விட்டது என்பதை எவ்வாறு அறிந்து விளக்கேற்றியுள்ளனர் என வியந்து நின்ற புலவர் உணர்வைப் பிச்சிப்பூவின் நறுமணம் ஈர்த்தது.

கார் காலத்து மாலைப்போதில் மலரும் இயல்புடையது' பிச்சி மெல்லிய காம்புகளைக் கொண்டது. அழகிய இதழ்களைக் கொண்டது. இன்பம் ஊட்டும் நறுமணம் கொண்டது. மலர்ந்தபின் பறித்துத் தொடுப்பது இயலாது என்பதால், மகளிர், அன்று மலரக்கூடிய பேரரும்புகளைப் பறித்து மாலையாகத் தொடுத்து, மலர்ப்பிடாவில் இட்டு வைப்பர். அவ்வாறு இடப்பட்டிருக்கும் அது. மாலைப்போது வந்துற்றதும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கி விடும்.

31