பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்திகை பலர்ந்து விட்டது என்றதும், மாலைப்போது வந்து விட்டது என்பதை, மகளிர் உணர்ந்து கொள்வர். இவ்வாறு, மணிகாட்டியாம் ம | ண் பு ைடய து, பித்தியின் மலரும் பருவத்துப் பேரரும்புகள்.

பித்திப் பேரரும்புகளுக்கும், மாலைப் பருவத்துக்கும் உள்ள இவ்வுறவறிந்து. மாலை வந்துற்றது என்பதை உணர்ந்து, மாலைக்கடனாற்றும் மகளிர் மாண்பினை எண்ணி இறும்பூது எய்திய புலவர், அம்மகளிர் விளக்கேற்றி, மாலைக் கடனாற்றும் காட்சி நலத்தைக்கண்டு மகிழ விரும்பினார். மனைகளுக்கு அணித்தாக நடைபோடத் தொடங்கினார்.

புலவர் கண்களுக்கு முதற்கண் தோற்றம் அளித்தது, அம்மகளிர் ஏற்றிய விளக்கின் சுடர். நெய் தீர்ந்து, எரிந்து, அணைந்து போகாது, நெடும் பொழுது நின்று எரிவதற்கேற்ப திரி எப்போதும் நெய்யில் ஆழ்ந்து கிடக்கும் வண்ணம், நெய் நிறையப் பெய்யப்பட்டிருந்தது. நெய்யைக் கண்ட புலவர், நெய் தேங்கிக்கிடக்கும் விளக்கைக் கண்ணுற்றார். கைநழுவி விடப்படினும் உடைந்து போகாமைகருதி, விளக்கு இரும்பால் செய்யப்பட்டிருந்தது. விளக்கை கண்ணுற்ற புலவர் கண் களுக்கு, அடுத்து அவ்விளக்கை ஏற்றிவைக்கும் மகளிரின் மூட்டு வளைந்த முன்கைகளும், அடுத்து, அக்கைகளில் இறுகக்கிடந்த (வெள்ளியும்,) பேரொளி வீசும் தந்தத்தால் ஆன வளையல்களும், அவற்றை அடுத்து, வளமுற வளர்ந்த மூங்கிலின் மென்மையும் பருமையும் வாய்ந்த தோள்களும் காட்சி அளித்தன.

முங்கிலினுக்கு நிகராகும் இயற்கை அழகு, வளையல் அணிந்து பெறும் செயற்கை அழகு, ஆகிய இருவகையாலும் *{p● .ெ ப ற் று ப் பெருமையுற்றதோடு நில்லாமல், விளக்கேற்றி வைப்பதைக்காலம் அறிந்து செயல் படுத்தும் கடமையாற்றுவதாலும் சிறப்புக் கொண்டவை அம்மகளிர்

32