பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மனையுறை புறாக்கள்

இல்லுறை தெய்வங்கள்ை மகளிர் வழிபடுவதை, மனைக்குட்சென்று கண்டு வெளியேறும்போது, புறாக்கள், இடையறவுபடாது எ ழு ப் பும் ஒலி கேட்கவே, நிமிர்ந்து நோக்கினார் புலவர். மாளிகையின் கொடுங்கையைத் தாங்கி நிற்கும் பல்கைகளில், சேவலும் பேடையும் இணை இணையாக அமர்ந்திருக்கும் புறாக்கூட்டத்தைக் கண்டார். இருள்துங்கும் இரவுப்போது தவிர்த்துப் பகற்போது முழுதும், ஊர்மன்று அடைந்து இரைதேர்ந்து உண்ணும் இயல்புடை யவை புறாக்கள். கூதிர்ப் பருவத்து வானம், மேகத்தால் மூடுண்டுகிடக்கவே, இது பகலா, அல்லது இரவா எனத் துணியக்கூடாத அளவு இருள் மயக்கியிருக்கவே, அப் புறாக்கள், இரைதேட, மன்று நோக்கிப் பறந்து செல்லாமல், மனைக்குள்ளாகவே அடங்கியிருப்பதையும், பறப்பது ஒழிந்து பகலெல்லாம் இருத்த இடத்திலேயே நின்றுகிடப்பதால், அவற்றின் செங்கால்கள், கடுப்பெடுக்கவே, அதுதவிர்க்க, மாறிமாறி அமரும் அவல நிலையையும், அந்த அவல நிலையிலும், ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்துபோய்விடாமல், சேவலும் பேடையுமாகப், பிரிவறியாது இணைந்தே இருக்கும் இன்பநிலையையும் கண்டு கழி பேரு வ ைக கொண்டார். . .

'மனையுறை புறவின் செங்கால் சேவல்

இன்புறு பெடையொடு மன்றுதேர்ந்து உண்ணாது இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்ப’’ (45–48)

36.