பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடவரல் மகளிர் = மடப்பத்தையும் கொண்ட மகளிர். பிடகைப் பெய்த=மலர்த்தட்டிலே இட்டு வைத்த. செவ்வி அரும்பின்=மலரும் பருவத்துப் பேரரும்பாகிய. பைங்கால் பித் திகத்து=மெல்லிய காம்பினையுடைய வாகிய பிச்சியின். அவ்விதழ் அவிழ் பதம் கமழ=அழகிய இதழ்கள் மலரும் பருவம் பெற்று மலர்ந்து மணம் வீச. பொழுது அறிந்து=மாலைப் பொழுது வந்துற்றது என

அறிந்து. இரும்பு செய் விளக்கின்=இரும்பால் செய்த விளக்கில். ஈர்ந்திரிக்கொளி இ=நெய் தோய்ந்த திரியைக் கொளுத்தி. நெல்லும் மலரும் தூஉய்=நெல்லையும் மலரையும் தூவி. கைதொழுது=இல்லுறை தெய்வங்கனைக் கை கூப்பி

வணங்கி. மல்லல் ஆவணம்=வளங் கொழிக்கும் வணிக வீதியெல்லாம். மாலை அயர=மாலைக் காலத்லை விழாவாகக் கொண்டாட.

மகளிர், மாலையில் வி ள க் கே ற் றி மனையுறை

தெய்வங்களைவழிபடும் நிகழ்ச்சியைக், " கயலேர் உண் கண் கணங்குழை மகளிர், கையுனையாக நெய்செய்து மாட்டிய சுடர்துயர் எழுப்பும் புண்கண் மாலை '

(குறுந்: 398), ' எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப, மல்லல்மூதுர் மாலை வந்து. இறுத்தென’’ -

( சிலம்பு:4:19-20). " அகனக ரெல்லால் அரும்பு அவிழ் முல்லை நிகர் மலர் நெல் லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கோர் கோலம் கொடியிடையார் தாம் கொள்ள '

(சிலம்பு 1:1-6). என்றவரிகளும் விளக்குவது காண்க.

35.