பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடுத்த பெரியமாலை இருக்கவும், குளிர்வாட்டும் கூதிர்ப் பருவத்தில் குளிர்ந்த மலர்களை மாலையளவு சூடிக்கொள்வது நலமாகாது என்பதால், மாலையைச் சூடிக்கொள்வதுவிடுத்து, அதே நிலையில், மகளிர்க்கு மங்கல நலந்தரும் மலர் சூடாதிருப்பதும் முறையாகாது என்பதால், அதுகருதி, பிடாவில் தொடுக்கப்படாமல் இருந்த ஒரு சில மலர்களை எடுத்துக் கூந்தலில் சூடிக்கொண்டாள். மனைமாட்சியின் மங்கலமாம் அம்மனைக்குரியாள் மாண்புகண்டு மனம் குளிர்ந்தார் புலவர்.

'கடியுடை வியன் நகர்ச் சிறுகுறுந் தொழுவர்

கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக வடவர்.தந்த வான்கேழ் வட்டம், தென்புல மருங்கின் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார், தண்நறும் தகரம்முளரி நெருப்பு அமைத்து இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப’’

(49–56)

உரை : கடியுடை வியன்நகர்=காவலை உ ைட ய அகன்ற

மாளிகையில். சிறுகுறுந்தொழுவர்=சிறிய குற்றேவல்களைச் செய்வார். கொள் உறழ் நறுங்கல்=கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த - நிறம்வாய்ந்த, நறுமணப் பொருள்களே

அரைத்து, அரைத்து நறுமணம் நாறும் அம்மியில். -

பல்கூட்டு மறுக=கத்தூரி முதலிய நறுமணப் பொருள்களால்

ஆன சாந்து அரைக்க,

40