பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடவர்.தந்த வான்கேழ் வட்டம்=வடநாட்டார்கொண்டுவந்து கொடுத்த வெண்ணிறம் வாய்ந்த சிலாவட்டம் அதாவது, சந்தனக்

கல். - தென்புல மருங்கின்=தென்திசை இடத்தான் சாந்தொடு துறப்ப=சந்தனக் கட்டையோடு பயன்படாமல்

கிடக்க. மகளிர் கூந்தல் கோதைபுனையார்= மகளிர் தம் கூந்தலில் மாலையிட்டு முடியாது. பல் இருங்கூந்தல்=பலவாக பின்னி விடப்பட்ட தம் கூந்தலில் சின்மலர் மெய்ம்மார்=சிலமலரே இட்டுமுடிப்பான் வேண்டி தண்நறும் தகரம் முளரி நெருப்பு அமைத்து-குளிர்ந்த ந று ம ண ம் வாய்ந்தமயிர்ச்சந்தன் விறகில் நெருப்பை உண்டாக்கி இருங்காழ் அகிலொடு=கரியவயிரம் வாய்ந்த அகிற்

கட்டையோடு. வெண் அயிர் புகைப்ப=வெள்ளிய கண்டசருக்கரையையும்

கூட்டிப்புகைஎழுப்ப

செல்வவாழ்வினர், தம்மனைகளில் குற்றேவல் மகளிரைக் கொண்டு பணி க ைள முடித்துக் கொண்டனர் என்பதற்கு இலக்கண இலக்கியச் சான்றுகளும் உள. 'ஏவல் மரபின் ஏனோர்' என்பது தொல்காப்பியம் (பொருள்:26). சிலப்பதிகாரத்தில் அவர்கள் "சிலதியர்’ என்றும் சிந்தரி நெடுங்கண் சிலதியர் (14:132) ஏவற்சிலதியர்' என்றும் 'ஏவற்சிலதியர் (5:51), "குற்றிளையார்' என்றும் ( 'நம் கோவலன் என்றாள் ஒர் குற்றிளையாள் '9:563) 'சிறுகுறுந்தொழிலியர்' என்று ம் (சிறுகுறுந்தொழிலியர் மறுமொழி உய்ப்ப' (8:97) அழைக்கப் பெற்றிருப்பது

காண்க.

41