பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடக்கிலிருந்து வரும் சந்தனக்கல்லில், தென்மலைப் பிறந்த சந்தனக்கட்டையை அரைப்பது வழக்கம் என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. வடமலைப் பிறந்த வான்கேழ்

வட்டத்துத் தென்மலைப்பிறந்த சந்தனம் மறுக’’

(சிலம்பு: 4: 37-37)

'a-aಣT தந்த வான்கேழ் வட்டம்’ (அகம்: 340)

அகிலும், கண்ட ச ரு க்க ைர யு ம், கூந்தலுக்குப் புகையூட்டப்பயன் கொள்ளப்பட்டன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. 'குடதிசை ம ரு ங் கி ன் வெள் அயிர் தன்னொடு, குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து,

(சிலம்பு:4:35-36).

மகளிர், தம்கூந்தலில் மாலை சூடிக்கொள்வதினும் ஒரு சில மலர்களை சூடிக்கொள்ளவே விரும்புவர் என்பதும்' சின்மலர் மங்கலம் குறிக்கும் என்பதும் சிலப்பதிகார மூலத்தாலும் அதன் உரையாலும் தெரிய வருகின்றன. பல்லிருங் கூந்தல் சின்மலர்' (2:65), 'தேமென் கூந்தல் சின்மலர்' (15:133) என்ற மூலவரிகளையும், "சின்மலர்= மங்கலமலர்; கற்பு முதலியவை அருச்சனை மலருமாம்" என்ற அடியார்க்கு நல்லார் உரையினையும் காண்க. (2: 65)

42