பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பகுவாய்த் தடவு

மகளிர் தம் மங்கலமாண்பு நலம் கண்டு மகிழ்ந்த மன நிறைவோடு மாளிகையின் மேல்மாடி நோக்கிப் படியேறத் தொடங்கினார் புலவர். இடையில் ஒரு தளம், கையாளப் படாமல் இருக்கும் பொருள்களைப் போட்டுவைக்கும் இடம், அப்பொருள்களுள் ஒன்று புலவர் கருத்தை ஈர்த்துவிட்டது, ஆலவட்டம் என அழைக்கப்படும் விசிறி உடல் வியர்க்குமளவு .ெ வ ப் ப ம் மி கு ம் வேனிற்பருவத்தில் அவ்வெப்பத்தைத் தணிக்கும் காற்றின் அசைவினை உருவாக்கப் பயன்படுவது. அதள் பயனும் பெருமையும் அறிந்தவர் அம்மனைவாழ் மக்கள். அதனால் பனையோலையால் ஆனதுபோலும் எளிய ஒன்றாக இல்லாமல், விசிறி வகைகளுள் சாலவும் சிறந்ததான் ஒன்றை வாங்கி வைத்திருந்தனர். விசிறிவனை வதில் கைதேர்ந்த தொழில்வல்லான் ஒருவனால் வேண்டும் போது விரிவாக்கவும் வேண்டாதபோது மடக்கவும் கூடிய தாய்ச், செந்நிறம் ஊட்டப் பெற்று வனப்புற வளையப் பட்டிருந்தது, அந்த ஆலவட்டம். ஆனால், புலவர் அதைக் காண்பதோ, கூதிர்ப்பருவத்தில் அது, அப்போது தேவை இல்லை. அதனால், அது, கையாளப்படும் பொருட்கள் வரிசையில் இடம் பெறவில்லை. ஆனால்; அப்போது தேவையில்லை எனினும், அடுத்துவரும் வேனிற்பருவத்துக்கு அது நணிமிகத் தேவை. அதுவுமல்லாமல், அரிதின் வனையப்பட்ட அரும்பொருள் அது. ஆகவே, அதை வறிதே வீசி எறிந்துவிடாமல், உள்ளிடு பொருட்களை வெளிக் காட்டவல்ல மெல்லிய துணியிலான உறையினுள் இட்டு, சுவற்றில் அடித்திருக்கும் முளைக் கோலில் மாட்டி நால விடப்பட்டிருந்தது. அது, அவ்வாறு கால விடப்பட்டு

43